மகளிர் உரிமைத்தொகை 24-ஆவது தவணை வந்தது
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (KMUT) திட்டத்தின் 24-ஆவது தவணை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. கடந்த மாதம் 15-ஆம் தேதி முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து…
கடவுள் சக்தி இதுதானா? ‘புனித’ நீராடியவர்கள் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி
திருச்செந்தூர், ஆக.16 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடலில் புனித நீராடியவர்கள், பெரிய அலைகள் காரணமாக பாறையில் மோதியதில், 10-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்ட பிறகு, பக்தர்கள்…
ஜம்மு – காஷ்மீர் பெரு வெடிப்பால் கனமழை வெள்ளத்தில் சிக்கி 60 பேர் உயிரிழப்பு, 200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
சிறீநகர், ஆக.16- ஜம்மு காஷ்மீரின், கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சோசிட்டி கிராமத்தில் நேற்று (15.8.2025) ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் என கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள ஆற்றில் திடீர் என வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த கிராமத்தில் இருந்து…
ஒன்றிய பிஜேபி அரசின் நிர்வாக இலட்சணம்! எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய 429 மருத்துவர்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஆக.16 நாடு முழுவதும் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) மருத்துவமனைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 429 மருத்துவர்கள் பதவி விலகி உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதிக ஊதியம், பணிச்சூழல், நெருக்கடி மற்றும் பதவி உயர்வு…
அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடர்ந்து அமலாகும் வெற்றிப் பள்ளிகள் திட்டம் ஏழை மாணவர்களின் பெரும் கனவுகளை வசமாக்கும் பள்ளி கல்வித்துறை செயலாளர் உறுதி
சென்னை, ஆக.16 அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடர்ந்து, அடுத்து வரும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான பெரும் கனவுகளை வசமாக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் தெரிவித்தார். மாதிரிப் பள்ளி திட்டம் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின்…
சுதந்திர நாள் ஒத்திகை என்ற பெயரால் வன்முறைப் பயிற்சியா?
சுதந்திர நாள் விழா ஒத்திகையின்போது, பள்ளி மாணவர்களின் கைகளில் வாளைக் கொடுத்து பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்ப கற்றுக் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரியானா மாநிலம் பதேஹாபாத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில்தான் இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. வழக்கமாக…
விபச்சாரம் என்றால்
விபச்சாரம் என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தையே. ஏனெனில், விபச்சார தோஷம் என்பதும், விபச்சாரம் செய்வதால் ஒழுக்கக் குறைவு என்பதும் வழக்கத்தில் பெண்களுக்குத்தான் உண்டேயொழிய, ஆண்களுக்குக் கிடையாது. 'குடிஅரசு' 26.10.1930
சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் வன்முறை காட்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை! காவல்துறை முடிவு
சென்னை, ஆக.16- சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் மற்றும் குற்றங்களுக்கு வழிவகுக்கும் ரீல்ஸ்களை தடுக்கக் கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் எழுத உள்ளது. காவல்துறையினர் நீண்டகாலமாகவே சமூக வலைதளங்களில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள் வரைமுறையின்றி இருப்பதால், அவை குற்றங்களுக்கு…
சொல்லோடு செல்லாத தந்தை பெரியார்-ம.கவிதா
ஊருக்கு உபதேசம் என்று பிரசங்கத்திலும் பரப்புரையிலும் ஈடுபட்டு வருகின்ற அரசியல்வாதிகள், பிரமுகர்கள், மக்கள் மத்தியில் தந்தை பெரியார் அவர்கள் சொல்லியதோடு மட்டுமின்றி கடைசி வரை அவற்றை செயலிலும் காட்டியவர். அதைப்பற்றி சொல்லோடு செல்லாத பெரியார் என்ற தலைப்பில் மானமிகு ம.கவிதா கூறிய…
கடவுள் சக்தி – சிரிப்புதான் வருது! கடவுளர் சிலை முகம் சிதைவு!
உடுமலை, ஆக. 16 திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஜல்லிபட்டி கிராமத்தில் உள்ள ஜக்கம்மாள் கோவிலில் கடவுளர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருமூர்த்தி அணைக்கு அருகில்…