என்.டி.ஏ. ஆட்சியில் பீகார் ஏழ்மையாகியுள்ளது தேஜஸ்வி குற்றச்சாட்டு
பாட்னா, பிப்.24 பீகார் மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மிகக் குறைந்த ஆண்டு வருமானம், அதிகமான வேலைவாய்ப்பின்மை, விளையாட்டு மற்றும் மற்ற துறைகளில் குறை போன்றவற்றால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகார் ஏழ்மையான…
அரியானா பி.ஜே.பி. ஆட்சியில் அரசுக் கணக்கில் ரூ.590 கோடி மோசடி
மும்பை, பிப்.24 அரியானா அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை அய்டிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியர்கள் மோசடி செய்தது குறித்து தடயவியல் தணிக்கை குழு ஆய்வு செய்து வருவ தாக ரிசர்வ் வங்கி தெரி வித்துள்ளது. அரியானா அரசு தனியார்…
கவர்னர் தன் உரையை மாற்றி படிக்க முடியுமா..?
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியும், மாநில சட்டசபைகளில் கவர்னர்களும் ஆற்றும் பங்கு குறித்து அரசியல் சட்டம் தெளிவான பாதைகளை வகுத்து தந்துள்ளது. அதன்படி, ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் ஜனாதிபதியின் உரையோடும், சட்டசபைகளில் கவர்னர்களின் உரையோடும் தொடங்குகிறது. ஜனாதிபதி உரையில் இத்தனை ஆண்டுகளாக எந்த…
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு விரைவில் நலமடைந்து இல்லத்திற்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் இருக்கிறது!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி சென்னை, பிப்.24 – கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு விரைவில் நலமடைந்து அவருடைய இல்லத்திற்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் இருக்கிறது என்று செய்தியாளர்களிடையே கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.…
‘திரிசூலங்கள்!’
சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு மாற்றுப் பெயர் சூட்ட வேண்டுமென்றால் ‘அறிவு விடுதலை இயக்கம்’ என்பது பொருத்தமாக இருக்கும் என்றார் சுயமரியாதைச் சூரியனாம் தந்தை பெரியார். ஆமாம் – மனிதனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு இருந்தும், அதனை எல்லா இடத்திலும் பயன்படுத்த முடியாத…
வாழ்க்கைக்கேற்ற அறிவுரை
நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை சுடும் தொடாதே என்று அனுபவ முறையில் நன்மை தீமைகளைக் கற்பிப்பதின் மூலம் சீக்கிரம் சுலபத்தில் கண்டிப்பாய் ஒழுக்கமான வாழ்க்கையை உண்டாக்க முடியாதா? ‘குடிஅரசு’ 7.4.1929
இப்படி ஒரு மதவெறியா? ‘மோடியை திட்டுபவர்களுக்கு’ போர்வை இல்லை… முஸ்லிம் பெண்களிடம் வழங்கிய போர்வையைத் திரும்பப் பெற்ற பா.ஜ.க. தலைவர்
டோங்க், பிப்.24- ராஜஸ்தானில் பிரதமர் மோடி பிப்.28 அன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் இச்சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களை அழைக்க ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் உள்ள கரேடா என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார் பாஜக முன்னாள் எம்.பி. சுக்பீர் சிங் ஜானபுரியா. பிரதமர் மோடியின்…
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி!
சென்னை, பிப்.24- தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.அய்.ஆா்.) பிந்தைய வாக்காளா் இறுதிப் பட்டியல் நேற்று (23.2.2026) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தலைமைத் தோ்தல் அதிகாரி…
ரூ. 5 ஆயிரம் உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி!
சென்னை, பிப்.24- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு நேற்று (23.2.2026) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் திட்டங்களை நிறுவவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள திட்டங்களை விரிவாக்கம் செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.…
