செல்வராணி-சரவணன் இணையேற்பு விழா
செல்வராணி-சரவணன் ஆகியோரின் சுயமரியாதைத் திருமணத்தை கழக பொறுப்பாளர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். பின் மணமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்று ‘பெரியார் உலக' நிதியாக ரூ.2000 வழங்கினர்.
கழகக் களத்தில்…!
17.8.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அவ்வை சண்முகம் சாலை மற்றும் டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு, இராயப்பேட்டை, சென்னை *தலைமை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட தலைவர்)…
மழலையர் மலர்கள் தினம்
13.8.2025 அன்று காலை 10:30 மணி அளவில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலையர் பிரிவில் மலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதில் அனைத்து மழலையர் பிரிவு பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்று ஒவ்வொரு பூக்களை பற்றியும்…
குறுவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை
ஊரணிபுரம், ஆக. 15- குறுவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் ஊரணிபுரம் சிறீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 29.07.2025 அன்று நடைபெற்றது. இதில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டனர் .17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் குழு இரண்டாம் பரிசு…
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்றால் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் சந்திக்க தயார் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பேட்டி!
சென்னை, ஆக 15-– சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகச் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ 13.8.2025 அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: கோரிக்கை மனு தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவினை தந்திருக்கிறோம். அந்த…
தந்தை பெரியார் பொன்மொழி
நான் ஒன்றும் கம்யூனிசத்திற்கோ, சோசலிசத்திற்கோ விரோதியல்ல. மற்றவர்களை விட, கம்யூனிசத்திலும், சோசலிசத்திலும் எனக்கு மிகுந்த பற்றும் ஆர்வமும் உண்டு. ஆனால், கம்யூனிசமும் சோசலிசமும் இந்த நாட்டிற்கு ஏற்ற முறையில் அமைக்கப்பட வேண்டும். கம்யூனிசத்திற்கும் சோசலிசத்திற்கும் நேர் எதிரியாக, அதாவது அபேத வாதத்திற்கு…
எதையும் சிந்தித்து பகுத்தறிவாளராகுங்கள்!
நாம் நமது கழகத் தோழர் திரு. இராமசாமி அவர்களின் தந்தை திரு. மாணிக்க உடையார் அவர்கள் காலமானதற்கு முதலாமாண்டு நினைவு விழாவானது இன்று நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த மிகத் துணிவு வேண்டும். நமது தோழர்களுக்குத்தான் இந்தத் துணிவு ஏற்படும். நமது…
கடவுள் ஒழிப்பு
இந்த நாட்டில் நாட்டுப் பற்றோ, மனிதப் பற்றோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமுதாயப் பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளியாகச் செய்து அவர்களது பகுத்தறிவு ஆராய்ச்சித் தன்மையைப்…
தி.மு. கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள்!
‘ஓரணியில் தமிழ்நாடு’ – உறுப்பினர் சேர்க்கையில் வெற்றி வாகை சூடிய நிர்வாகிகளுக்குப் பாராட்டு – வாக்குத் திருட்டு – SIR குளறுபடிகளுக்கு கண்டனம்! சென்னை, ஆக. 14– தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில்…
7 மாவட்டங்களுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் விரிவாக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஆக.14 2025-2026ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (13.08.2025) சென்னையில் தொடங்கிவைத்தார். திட்டத்தின்…