இனி யூடியூப்-இல் பொருள்கள் ஆர்டர் பண்ணலாம்

Viduthalai
2 Min Read

யூடியூப் நிறுவனம் புதிதாக YouTube Shopping affiliate program என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, யூடியூபில் உள்ள தேர்வு செய்யப்பட்ட கன் டென்ட் கிரியேட்டர்கள், Influencers Flipkart & Myntra போன்ற இணைய தளங்களில் உள்ள உற்பத்திப் பொருள்களை நேரடியாக டேக் செய்ய முடியும். இதற்கு கமிஷன் கிடைக்கும். அதேபோல், பயனர்களும் யூடியூபிலிருந்தே நேரடியாக பொருள்களை ஆர்டர் செய்யலாம்.

புகையிலைப் பொருள்கள் விற்போருக்கு எச்சரிக்கை!
பள்ளிகள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைக்காரர், உற்பத்தியாளர், முகவர்கள் மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் விற்பனைக்கு எதிரான வழக்கில், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பல், வாய் பரிசோதனைகளை ஆண்டுக்கு இருமுறை நடத்தவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் புகையிலை தடுப்பு மய்யத்தை நிறுவவும் அறிவுறுத்தியுள்ளது.

175 ஆண்டுகளை நிறைவு
செய்த பதிவு அஞ்சல் சேவை!
இந்தியாவில் பதிவு அஞ்சல் சேவை தொடங்கி இன்றுடன் 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நவ.1, 1849ஆம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்ட அதே நாளில்தான் கொல்கத்தாவிலும் பதிவு அஞ்சல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெள்ளையர் ஆட்சியில் சாதாரண அஞ்சல்களில் முக்கிய ஆவணங்களை அனுப்பி வைக்க தொடங்கப்பட்ட இந்த சேவை இன்று சுதந்திர இந்தியாவிலும் ட்ராக்கிங் வசதி கொண்ட நம்பிக்கைக்குரிய சேவையாக தொடர்கிறது என்றால் மிகையில்லை.

இம்மாதம் அமலாகும்
முக்கிய மாற்றங்கள்
எஸ்.பி.அய். கடன் அட்டைகளுக்கான பைனான்ஸ் கட்டணங்கள் 3.75%ஆக அதிகரிக்கப்பட்டிருப்பது இன்று அமலாகிறது அய்.சி.அய்.சி.அய். கிரெடிட் கார்டுகள் திருத்த விதிகள் நவ. 15 முதல் அமலாகின்றன. உள்ளூர் பணப்பரிவர்த்தனைக்காக ஆர்.பி.அய்.-யால் அறிவிக்கப்பட்ட விதிகள் இன்று அமலாகிறது
ஏ.டி.எம். அட்டையில் 16 எண்கள்.. என்ன அர்த்தம்?
ஏ.டி.எம்.-இன் முன்பகுதியில் உள்ள 16 எண்களுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம். முதலில் உள்ள 6 எண்கள், அதை அளிக்கும் (விசா, மாஸ்டர் ETC) நிறுவன அடையாள எண் ஆகும். அதையடுத்து 7 முதல் 15 வரையிலான எண்கள், வாடிக்கையாளரின் சேமிப்பு கணக் குடன் தொடர்புடைய எண் ஆகும். 16ஆவது எண் CHECK DIGIT எண் ஆகும். அதாவது, அந்த அட்டை செல்லுமா, காலாவதியாகி விட்டதா என்பதை அறிய உதவும் எண் ஆகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *