நீதிமன்ற விசாரணையை காட்சிப்பதிவு எடுக்க உச்ச நீதிமன்றம் தடை

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஜூலை 25-  நீதிமன்ற விசார ணைகளின் நேரலை காட்சிப்பதிவுகளை அனுமதியின்றி பதிவு செய்து, எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்புவதற்கு எதிரான வழக்கு, தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி சூர்யா காந்த், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் குறித்து தான் கூறிய கருத்துகளை ஊடகங்கள் திரித்து வெளியிட்டதால், தேவையற்ற விமர்சனங்கள் எழுந்ததாக வருத்தம் தெரிவித்தார்.

மேலும் நீதிபதிகள், ‘‘தலைமைப் பதி வாளரின் முன்அனுமதியின்றி நீதிமன்ற ஒலி, ஒளிப்பதிவு செய்யவோ, எடிட் செய்யவோ, சமூக வலைதளங்களில் பகிரவோ கூடாது என்றும், அவற்றைப் பயன்படுத்தி பணம் திரட்டவோ, வணிக ரீதியாகப் பயன்படுத்தவோ கூடாது’’ என்றும் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு ஊடகங்களின் வழக்கமான செய்தி சேகரிப்பைக் கட்டுப்படுத்தாது என்றும், பத்திரிகையாளர்கள் வழக்கம் போல நீதிமன்றச் செய்திகளைச் சேகரிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். இந்த உத்தரவின் நகல் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *