வங்கிகளில் ரூ. 7,623 கோடி நிதி மோசடி அம்பானி நிறுவனங்களின் மேனாள் அதிகாரிகள் கைது சி.பி.அய். நடவடிக்கை

புதுடில்லி, ஜூன் 24 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 7,623 கோடி நிதி மோசடி செய்த புகாரில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரிகள் சிஇஓ இருவரை மத்திய புலனாய்வு அமைப்பு சிபிஅய் நேற்று  (22.6.2026) அதிரடியாகக் கைது செய்துள்ளது.

ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட் (RCFL) மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் (RHFL) ஆகிய நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்களில் பெரும் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஅய் அதிகாரிகள் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையின் அடுத்த கட்டமாக, மோசடிக்கு காரணமான முக்கியப் பொறுப்பாளர்கள் மீது சிபிஅய் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி: தேவாங் மோடி – ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

ரவீந்திர சுதல்கர் – ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆகிய இருவரையும் சிபிஅய். அதிகாரிகள்  கைது செய்தனர்.

வங்கிகளுக்கு ஏற்பட்ட
பல கோடி இழப்பு

இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து பொதுத்துறை வங்கிகளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் –- 13 பொதுத்துறை வங்கிகள் ரூ.4097 கோடி ரிலை யன்ஸ் ஹோம் பைனான்ஸ் 10 பொதுத் துறை வங்கிகள்      – ரூ.3,526 கோடிமொத்தம் 23 வங்கிகள் ரூ. 7,623 கோடிபொதுத் துறை வங்கிகளின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, இவ்வளவு பெரிய தொகையை இழக்கச் செய்த இந்த மோசடி வழக்கில், கைதான இருவரிடமும் சிபிஅய் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவம் கார்ப்பரேட் மற்றும் வங்கித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *