“த,வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை முதலமைச்சர் இன்னமும் பாதுகாப்பது ஏன்?”: உதயநிதி கேள்வி

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 13-  ‘கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தகாத தகவல் அனுப்பிய தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை முதலமைச்சர் இன்னமும் பாதுகாப்பது ஏன்? தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவருக்கு துணிச்சல் இல்லை’ என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத தகவல் அனுப்பிய குற்றச்சாட்டில் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை இந்த ‘டம்மி சிஎம்’ இன்னமும் பாதுகாப்பது ஏன்?

கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய சட்டமன்ற துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல சிண்டிகேட்டா?

டம்மி சிஎம்முக்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் – த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக திசைத் திருப்பும் அரசியலில் இறங்குகிறார். ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் – அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று ஆன்லைன் மாஃபியாவையும், பெய்டு பேரில்லா பிச்சைகளையும் வைத்து ரீல்ஸ் ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?

மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *