இந்துக் கோயிலுக்குள் மற்ற மதத்தினர் செல்லக் கூடாதாம்! விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

1 Min Read
- Advertisement -

மதுரை, அக். 24- இந்து மத கோயிலுக்கு செல்லும்போது, பிற மதத்தினர் இந்து மத நம்பிக்கை உள்ளதென கையெழுத்திட வேண்டு மென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த தங்கம் வெங்கடேஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

பிற மத சின்னங்களைத் தாங்கியிருக்கும் நபர்கள் மற்றும் இந்து மத சம்பிரதாயங்களைப் பின்பற்றாதவர்கள், கோயில் கருவறைகள் மற்றும் மண்டபங்களுக்குள் நுழைதல் குறித்த விதி முறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், முருகன் ஆகியோர் முன் நேற்று (23.10.2026) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், உரிய விதிமுறைகளை பின்பற்றியே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இனியும் விதிமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘நாங்களும் சமூக வலை தளங்களைப் பார்க்கிறோம். அண்மையில் கூட திருவண்ணாமலையில் குல்லா போட்டு ஒருவர் கோயிலுக்குள் செல்கிறார். இதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா? மதுரை வந்த முதலமைச்சர் கூட மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றபோது, முறைப்படி பதிவு செய்து, வெளியே வரும்போது குங்குமம் வைத்து வந்தார். அதை ஏற்றுக்கொள்கிறோம்’’ என்றனர். அப்போது அரசு தரப்பில், பிற மதத்தினர் இந்து மத கோயிலுக்குள் செல்லும்போது உரிய விதிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பிற மதத்தினர் இந்து மத கோயிலுக்கு செல்லும்போது இந்து மத நம்பிக்கை உள்ளது என கையெழுத்திட வேண்டும். விதிமுறைகளை முறைப்படி கடைப்பிடிக்க வேண்டும் என உத்தர விட்டு மனுவை முடித்து வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *