நேரடி நெல் கொள்முதல் மய்யங்கள் திறக்கப்படாததால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கும் அவலநிலை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

காஞ்சிபுரம், செப். 5- காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததாலும், கொள்முதல் தாமதத் தாலும் அறுவடை செய்யப்பட்ட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள மேல்பெரமநல்லூர் உள்ளிட்ட தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்கெனவே செயல்பட்ட இடத்தில் சுமார் 10,000 நெல் மூட்டைகள் அறுவடை முடிந்து கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்தன.

கடந்த ஒரு மாதமாக இந்த மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து கொள்முதல் செய்யப்பட வில்லை என்று கூறப் படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (3.9.2026) பெய்த கனமழையால் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நீரில் நனைந்து பெரும் சேதமடைந்துள்ளன.

இதேபோல் சாலவாக்கம், கீழ்பெரம நல்லூர் ஆகிய கிராமங் களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.

இதனால் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திறந்த வெளியில் குவித்து வைத் துள்ளனர்.

திறந்த வெளியில் கூரை வசதியின்றி வைக்கப் பட்டிருந்த நெல் மணிகள் தொடர்ந்து பெய்த மழையால் நனைந்து, தற்போது முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களிடம் கேட்டபோது, “மாவட்டம் முழுவதும் விவசாயிகளின் நலன் கருதி சுமார் 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஒரு வார காலத்துக்குள் அனைத்து மய்யங்களும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, நெல் கொள்முதல் துரிதப் படுத்தப்படும்” எனத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *