ஹோர்மூஸ், அக். 30- ஈரானின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற் றப்படும் வரை ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படாது என்று ஈரான் புரட்சிகரப் படை அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடு களில் நிலவிவரும் பதற்ற சூழலில், மிக முக்கிய மான பன்னாட்டு கடல் வழிப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து ஈரானிய ராணுவ உயர் அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சார்ந்த நிபந்தனைகள் ஏற்கப்படும் வரை இந்த நீரிணை திறக்கப்படுவதில் சிக்கல் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்து உள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய்யின் விலை, பீப்பாய்க்கு 0.75 சதவிகிதம் உயர்ந்து 115.74 டாலராக அதிகரித்தது. மேலும், அமெரிக்க கச்சா எண்ணெய்யின் (வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்) விலையும் 0.71 சதவிகிதம் உயர்ந்து, 102.72 டாலராக அதிகரித்தது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, முதன்முறையாக அமெரிக்க கச்சா எண் ணெய்யின் விலை 100 டாலரை கடந்துள்ளது குறிப்பிடதக்கது.
