சிறீநகர், அக்.24 டில்லியில் உள்ள அரசுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் வெளிநாட்டு சதி இருப்பதாகக் கூறுவது ஒன்றிய அரசின் வழக்கமாகிவிட்டதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிறீநகரில் நேற்று (23.10.2026) செய்தியாளர் களை சந்தித்துப் பேசிய அவர், ஒன்றிய அரசின் நடவடிக்கைகளையும் குற்றச்சாட்டுகளையும் சுட்டிக்காட்டிப் பேசியதாவது:
‘‘டில்லியில் உள்ள அரசுக்கு எப்போ தெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ, அப்போ தெல்லாம் அவர்களுக்கு ஏதோவொரு வெளிநாட்டு சதி கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால், தங்களின் சொந்த தவறுகளை அவர்களால் ஒருபோதும் பார்க்க முடிவ தில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “எஸ்அய்ஆர் அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு சதி இருப்ப தாகக் குற்றம் சாட்டுபவர்கள், அது எந்த நாடு என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இதில் எந்த நாடு தலையிட முயற்சிக்கிறது? என்பதைக் குறிப்பிட யாரிடமும் எந்த பெயரும் இல்லை. எந்தவித ஆதாரமும் இன்றி வெறும் பேச்சுக்காக மட்டும் ‘வெளிநாட்டு சதி’ என்று தொடர்ந்து கூறிவருகிறார்கள்” என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
