புதுடில்லி, ஜூலை 23 டில்லியில் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகரில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று (23.7.2026) மூடப்பட்டுள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு விவகா ரத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிர மடைந்துள்ளது.
தற்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், அசம்பா விதங்களைத் தவிர்க்க டில்லியில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் போராட்டக்காரர்களின் வன்முறை போன்ற நிகழ்வுகளால் டில்லி பதற்றம் நிறைந்த பகுதியாகக் காணப்படுகிறது.
இந்தப் போராட்டத்தை கலைப்ப தற்கும், கூட்டம் அதிகரிப்பதை தவிர்ப்பதற்கும் டில்லியில் உள்ள 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2 ஆவது நாளாக இன்றும் (23.7.2026) மூடப்படுவதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் போராட்டம் எதிரொலி: டில்லியில் 2 ஆவது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்
Leave a Comment
