தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி கருநாடகத்திலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெங்களூரு, அக். 09- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் நேற்று (8.10.2026) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுத்தாளர் தேவனூரு மகாதேவா, நடிகர் பிரகாஷ் ராஜ், யூடியூபர் துருவ் ராதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் அபிஜித் திப்கே பேசும்போது, “தலைமை தேர்தல் ஆணையர் எஸ்அய்ஆர் மூலம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பெயர்களை நீக்கியுள்ளார். உயிரோடு இருப்பவர்களின் பெயர்களை எல்லாம் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். அவரது மோசடியின் காரணமாகவே பாஜக கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது.

இந்த மோசடியால் பாஜகவை எதிர்த்த மு.க.ஸ்டாலின், மம்தா ஆகியோர் தோல்வி அடைந்தனர். வாக்கு திருட்டின் மூலமாகவே மோடி மீண்டும் பிரதமராகி இருக்கிறார். எஸ்அய்ஆர் மூலம் ஜனநாயகத்தை அவர் கொலை செய்து விட்டார். இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து தேசத்தையும் ஜனநாயகத்தையும் மோடியிடம் இருந்து மீட்டெடுப்போம்” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *