சீனாவின் பரபரப்பான தெருக்கள், விமான நிலையங்கள், சுரங்கப்பாதை நிலையங்களில் உள்ள முக்கிய விளம்பரப் பலகைகளில் நீண்ட காலமாக திரைப்பட நட்சத்திரங்களும் பாப் நட்சத்திரங்களும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
ஆனால், தற்போது வணிக விளம்பரங்கள், பிரபலங்களின் படங் களுக்குப் பதிலாக, இந்த இடங் களில் நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி யாளர்களின் முகங்களையும், அவர்களின் முக்கியமான கண்டு பிடிப்புகளையும் அவற்றின் கதைகளுடன் காட்சிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்களாம்.
இந்த முயற்சி, இளைஞர் களிடையே அறிவியலின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதுடன், நாட் டின் உண்மையான நாயகர்களுக்குச் சிறப்புச் செய்வதாகவும் அமைகிறது.
பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களில், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இந்தக் காட்சிகள் பொது மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
அடுத்தடுத்து, செங்சோ, ஹாங்சோ, சோங்கிங் மற்றும் ஜினான் உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியுள்ளது. இந்த விளம்பரப் பலகைகளில், ராக்கெட் விஞ்ஞானி கியான் சூசென், கலப்பின அரிசி முன்னோடி யுவான் லாங்பிங், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி து யூயூ மற்றும் அணு இயற்பியலாளர் டெங் ஜியாக்சியன் போன்றோரின் படங்கள் இடம்பெற்று, அறிவியல் மற்றும் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை வெளிப் படுத்துகின்றன.
சினிமா, பொழுதுபோக்குப் பிரபலங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதற்குப் பதிலாக, உண்மையான கண்டுபிடிப்பாளர் களைப் போற்றுவதற்கு இந்த முயற்சி குழந்தைகளுக்கு உதவுகிறது என்று பல பெற்றோர்கள் குறிப்பிட்டனர்.
சீனா, அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் தனது நீண்டகால தேசிய வளர்ச்சியின் முக்கிய உந்துசக்திகளாகக் கருதுகிறது. இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முக்கிய பெருநகரங்களிலிருந்து சிறிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டங் களை அதிகாரிகள் அறிவித் துள்ளனர். இனிவரும் காலங்களில், அடுத்த தலை முறை உலகளாவிய புத்தாக் கங்களுக்கு வழி வகுக்க உதவும் வகையில், அறிவியல் கண்காட்சி களையும் இளம் அறிவாளிகளுக்கான ஆராய்ச்சி நிதியுதவியையும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாம்!
நாடு உருப்படும்!
சினிமா மோகத்தால், திரைப்பட நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், திரைப்பிரபலங்களுக்கும் கட் அவுட் வைத்துப் பாலூற்றி, தீபாராதனை காட்டி, மண் சோறு தின்று, கூட்டம் கூட்டமாகக் கூடிச் செத்து, அரசியல் என்றால் என்ன?, சமூகம் என்றால் என்ன? ரசிகத் தன்மைக்கும், அரசியல் ஆட்சி அதிகாரத்துக்கும் என்ன வேறுபாடு என்பதையெல்லாம் அறியாமல், அன்றாடம் திரைப்படங்களைப் பற்றியே பேச்சு, விவாதம், கூட்டம், கும்பல், கூச்சல், கண்ணீர், பரவசம் என்று இருக்கும் இந்த நாட்டில் இதையெல்லாம் (சீனாவின் மாற்றம்) வழிகாட்டியாகக் கொண்டு செயல்படுத்த வேண்டாமா?
– தேனீ
