இங்கு அல்ல – சிங்கப்பூரில்! இளைஞர்களுக்காக டேட்டிங் செயலி அறிமுகம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் 0.87 சதவீதமாக வீழ்ந்த நிலையில், தற்போது அரசு சார்பில் இளைஞர்களுக்காக ‘பர்ஸ்ட் டேட்’ என்ற டேட்டிங் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அள வுக்குச் சரிந்து வருவது, பன்னாட்டு அளவில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தொகையை நிலையாக வைக்கத் தேவையான 2.1 மாற்று நிலையை விட பிறப்பு விகிதம் மிகக் குறைந்துள்ளதால், நாடுகள் பணக்கார நாடுகளாக மாறுவதற்கு முன்பே முதியோர் நாடாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இந்த விகிதம் 1.4 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. (அதாவது 100 பெண்களுக்கு 140 குழந்தைகள்). குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென் மாநிலங்கள் தற்போது சலுகைகளை அள்ளி வீசுகின்றன. ஆந்திராவில் 3-ஆவது குழந்தைக்கு ரூ.30 ஆயிரமும், 4-ஆவது குழந்தைக்கு ரூ.40 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, 3-ஆம் குழந்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளித்துச் சட்டம் இயற்றியுள்ளது.

சீனா, ரஷயா, தென்கொரியா போன்ற நாடுகள் குழந்தை பெற ரொக்கப்பணம் அளிக்கும் நிலையில், பிறப்பு விகிதம் 0.87 சதவீதமாக வீழ்ந்த சிங்கப்பூரில் அரசு சார்பிலேயே ‘பர்ஸ்ட் டேட்’ என்ற டேட்டிங் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசின் ‘சிங்பாஸ்’ மூலம் மட்டுமே பதிய முடியும் என்பதால் இதில் போலி கணக்குகளுக்கு இடமில்லை. நோபல் பரிசு பெற்ற கணித சூத்திரத்தின் அடிப்படையில், தகுதியான ஒரே ஒரு இணையை மட்டுமே இந்தச் செயலி பரிந்துரைக்கும். முதற்கட்டமாக 21 முதல் 35 வயதுடைய அரசு ஊழியர்களுக்குச் சோதனை முறையில் இது தொடங்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்குப் பாடம் புகட்டும் சிங்கப்பூரின் இந்த விஞ்ஞானப்பூர்வ முயற்சி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *