பெண்கள் பேருந்து பயணத்திற்கான வெற்றிப் பயணம் திட்டத்திற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 6- வெற்றிப் பயணம் திட்டத்தில் பயணச்சீட்டில் பயணி ஏறும், இறங்கும் இடம் விவரங்களை பதிவிட போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

வெற்றிப் பயணம் திட்டம் அக்.2ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாநகர்,நகர்ப்புற சாதாரண, எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ், புறநகர், மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர்,சிறுமியர் மற்றும் திருநர் பயணிகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இதனிடையே திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெற்றிப் பயணம் திட்டத்தில் இடம்பெறும் வழித்தடங்களின் விவரங்கள் புதுப்பிக்கப் பட்டு, ஒவ்வொரு தகுதியான சேவையும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரமென்பொருள் அமைப்பில் சரியாக இணைக்கப்பட வேண்டும். சுழியம் பயணச்சீட்டு (ZERO Ticket) உருவாக்கம் முன்கூட்டியே சோதித்து உறுதிசெய்ய வேண்டும்.

டிஜிட்டல் வழித்தட பலகை உள்ள பேருந்துகளில் “வெற்றிப் பயணம்” தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும். டிஜிட்டல் வழித்தட பலகை இல்லாத பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட “வெற்றிப் பயணம்” ஸ்டிக்கர் மட்டும் ஒட்டப்பட வேண்டும். மகளிர் மற்றும் திருநர் பயணிகளிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஒவ்வொரு தகுதியான பயணத்துக்கும் பூஜ்ஜியம் பயணச் சீட்டு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். பயணச்சீட்டு வழங்காமல் விடுதல் அல்லது தவறாகப் பயன்படுத்தினால் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நகர சாதாரன சேவைகளில் தற்போது நடைமுறையில் உள்ள பயணச்சீட்டு நடைமுறை மாற்றமின்றி தொடர வேண்டும். எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ், மலைப்பகுதி மற்றும் புறநகர் சாதாரணப் பேருந்துகளில் பயணச்சீட்டில் பயணி ஏறும் மற்றும் இறங்கும் இடம் விவரங்கள் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். மின்னணு கருவி செயலிழந்தால், அச்சிட்ட பயணச் சீட்டு வழங்க வேண்டும்.

தேவையான கட்டண விவரம், பயணிகளின் எண்ணிக்கை, தடம்எண் மற்றும் தேதி ஆகியவை பயணச்சீட்டு பதிவேட்டில் முறையாகப் பதிவு செய்யவேண்டும். பரிசோதகர்கள், சோதனை அலுவலர்கள், பேருந்தில் பயணம் செய்யும் தகுதியான பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். பயணச்சீட்டு இல்லாத தகுதியான பயணியிடம் அபராதம் வசூலிக்கக் கூடாது.

மாநிலங்களுக்கு இடையே செல்லும் சாதாரணப் பேருந்துகளில் தமிழ்நாட்டுக்குள் இருந்தால் மட்டுமே சுழியம் பயணச்சீட்டு வழங்க வேண்டும். ஏறும் இடம் அல்லது இறங்கும் இடம் அண்டை மாநிலம், யூனியன் பிரதேசத்தில் இருந்தால் நடைமுறையிலுள்ள பயணச்சீட்டு வழங்க வேண்டும். வழித்தடம் இடையில் அண்டை மாநிலம், யூனியன் பிரதேசம் வழியாகச் சென்றால் சலுகை தொடரும்.

இதற்கேற்ப மின்னணு கருவியில் வசதி ஏற்படுத்த வேண்டும். முக்கியப் பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் கள கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். நெரிசல், நீண்ட காத்திருப்பு, தாமதம், சேவை குறைபாடுகள் இருந்தால் திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *