ரூ.98 கோடி தங்கப் புதையல் கழிவுநீர்க் குழாய் மாற்ற பள்ளம் தோண்டியபோது கண்டெடுப்பு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பிரஸ்ஸல்ஸ், ஆக 18- பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின்போது, கட்டுமானத் தொழிலாளர்கள், தங்கக் கட்டிகள் மற்றும் அரிய தங்க நாணயங்கள் அடங்கிய மிகப்பெரிய புதையலை கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.98 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ் ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மொன்டே பகுதியில், மதுபான உற்பத்தி ஆலை கடந்த 1899 முதல் 1970 வரை செயல்பட்டு வந்தது. தற்போது, அந்தப் பழமையான கட்டடம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ‘சிஏடபிள்யூ ஊஸ்ட் லான்டரன்’ என்ற சமூக நல அமைப்பு சார்பில், அங்கு புதிய அலுவலகங்கள் மற்றும் குடியிருப் புகளை உருவாக்கும் பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்கு பழைய கழிவுநீர் குழாய்களை மாற்றுவ தற்காக பூமியில் பள்ளம் தோண் டிய போது, தங்கப் புதையல் கண்டு டெடுக்கப்பட்டுள்ளது. 18 வயதான கோபெ என்ற பணியாளர் இந்தப் புதையலைக் கண்டுபிடித்தார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், “கழிவுநீர் குழாய்களை மாற்றுவ தற்காக பள்ளம் தோண்டிய போது, திடீரென அங்கு ஏதோ கிடப்பதைப் பார்த்தோம். முதலில் அவை யூரோ நாணயங்கள் என்று நினைத்தேன். பின்னர், அது தங்கக் கட்டிகள் என தெரிய வந்தது” என்றார். தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட தங்கப் பட்டைகள் உள்ளிட்ட இந்தப் புதையலின் மதிப்பு, சுமார் ரூ.98 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுபான ஆலை உரிமையாளர் தியோபிலஸ் வான் அஸ்ஷே என்பவருக்காகக் கட்டப்பட்ட பிரம்மாண்ட மாளிகை யின் அடித்தளச் சுவருக்குள் ஒரு பையில் இந்தப் புதையல் பாது காப்பாக வைக்கப்பட்டிருந்தது.

புதையல் கண்டுபிடிக்கப்பட்டதும் அதிகாரிகள் அந்தப் பகுதியைப் பாதுகாப்புப் பகுதியாக அறிவித்து, தங்கப் பொருட்களை பிரஸ்ஸல்ஸில் உள்ள பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். தற்போது, அவை யாருக்குச் சொந்தமானவை என்பதைத் தீர்மானிக்க விசாரணை நடைபெற்று வருகிறது.

கிழக்கு ஃபிளாண்டர்ஸ் அரசு வழக்குரைஞர் அலுவலகத்தைச் சேர்ந்த ஹன்னே ஒலிவியர் கூறுகையில்,

முதலில் அந்தத் தங்கம் திருடப் பட்டதா அல்லது ஏதேனும் குற்றச் செயலுடன் தொடர்புடையதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இந்தப் புதையலுக்கு கட்டுமானப் பணியை மேற்கொண்ட நிறுவனங்கள், சமூக நல அமைப்பு மற்றும் தியோபிலஸ் வான் அஸ்ஷே குடும்பத்தின் வாரிசுகள் உள்ளிட்டோர் உரிமை கோரக்கூடும். பெல்ஜியம் நாட்டு சட்டப்படி, புதையலைக் கண்டுபிடித்தவர்கள் அதன் உண்மையான உரிமையா ளர்கள் உரிமைகோர முன்வருவதற்கு குறைந்தது அய்ந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *