அமெரிக்கா – சிகாகோவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு நடத்திய பெரியார் பிறந்த நாள் விழா ‘‘பெரியார் நடை ஓட்டம்’’

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நம் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்தநாள் விழா தமிழ்நாடு தாண்டி இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் எல்லா ஆண்டுகளையும் போல இந்த ஆண்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அமெரிக்க மண்ணில் தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக பெரியார் பன்னாட்டு அமைப்பு முன்னெடுத்த “Run for Periyar” நிகழ்ச்சி சிகாகோவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கடந்த  செப்டம்பர் 20ஆம் தேதி  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறுவர் முதல் பெரியவர் வரை இந்தப் ‘பெரியார் நடை ஓட்ட’த்தில் கலந்துகொண்டு அய்ந்து கிலோமீட்டர் தூரத்தை நடந்தும் ஓடியும் முடித்தனர். பெரியார் பிஞ்சுகள் பெரியார் பற்றியும், அவர் ஆற்றிய அரும்பணிகள் பற்றியும் அனைவருக்கும் எடுத்துரைத்தனர். இந்த விழாவின் இறுதியில் பங்கேற்பாளர்கள் அனை வருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்தியா
இது போன்ற நிகழ்வுகள் தந்தை பெரியார் வகுத்துத் தந்த பகுத்தறிவுச் சிந்தனைகளையும் சுயமரியாதைக் கொள்கை களையும் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரிடையே குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே எளிதாகக் கடத்தும் ஒரு சிறந்த சமூக வெளியாக அமைகின்றன. நடை, ஓட்டம் போன்ற பங்கேற்புடன் கூடிய இந்த ஏற்பாடுகள் மூலம் பெரியார் சிந்தனைகள் மக்களிடையே மேலும் நெருக்கமாகவும் உயிரோட்டமாகவும் பரவுகின்றன. இத்தகைய கூட்டங்கள் தலைமுறை தலைமுறையாகப் பெரியார் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிக்க மக்களை ஊக்குவிக்கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *