பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் த.வெ.க. ஆட்சி! கனிமொழி கண்டனம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.15- மதுரையில் நீதி கேட்டுப் போராடிய குடும்பத்தினரை தவெக ஆட்சி ஒடுக்குவதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி திங்கள் கிழமை நேற்று (14.9.2026) தெரிவித்தார்.

மதுரை ஆனையூரைச் சேர்ந்த மாணவர் தமிழ்ச்செல்வன் 6.9.2026 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இந்த நிலையில், கூடல்புதூர் பகுதியில் உள்ள ஒரு கண்மாயில் அவர் இறந்து கிடந்தது அடுத்த நாள் தெரியவந்தையடுத்து, சடலம் மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக கூடல்புதூர் காவல் துறையினர் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தனது மகனின் இறப்புக்கு நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் காவல்துறையைக் கொண்டு தவெக அரசு ஒடுக்குவதாகக் குற்றம் சாட்டி கனிமொழி கண்டனம் தெரிவித் துள்ளார்.

குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத் தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது என்று அவர் தனது கண்டனப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *