தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் தேர்தல் பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் உத்தரவு

1 Min Read

சென்னை, ஜூன் 11 தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திருச்சி (கிழக்கு), பெருந்துறை, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி), அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அந்தத் தொகுதி உறுப்பினர் பதவிவிலகலைத்    தொடர்ந்து அத்தொகுதி காலியானது.

மேலும், அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருந்துறை தொகுதி உறுப்பினர் ஜெயகுமார், மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி உறுப்பினர் சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகலைத் தொடர்ந்து அந்தத் தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்டன. சட்டப்படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில், இந்த 5 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தேர்தல் நடத்துவதற்கான நிர்வாக ஏற்பாடுகளை வரும் 22ஆம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  இந்த நிலையில் இடைத்தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *