விளைபொருள்களை சந்தைப்படுத்த பண்ணைக் கொள்முதல் முறை! அமைச்சர் அறிவிப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.22-விவசாயிகளின் விளைபொருள்களை சந்தைப்படுத்திட ரூ.50 கோடி மதிப்பீட்டில் பண்ணைக் கொள்முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 20.8.2026 அன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து, அமைச்சர் வ. காந்திராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்:

விவசாயிகளின் போக்குவரத்து செலவு, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும் மற்றும் லாபகரமான விலை கிடைக்கவும், விவசாயிகளின் விளை நிலங்களின் அருகிலேயே நெல், மஞ்சள், மக்காச் சோளம் மற்றும் தேங்காய் போன்ற தரமான விளைபொருள்கள் இடைத்தரகர்கள் இன்றி சந்தைப்படுத்திட 50 கூட்டுறவு விற்பனை சங்கங்களின் மூலம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் பண்ணைக் கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப் படும்.

சேமிப்புக் கணக்கு துவக்குதல், அடிப்படை வங்கி மற்றும் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குதல், வைப்புகள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்க, வங்கி வசதிகள் குறைவாக உள்ள 3,452 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கப் பகுதிகளில், ரூ. 6.90 கோடி மதிப்பீட்டில் நுண் தானியங்கி சாதனங்கள் (Micro ATM) நிறுவப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *