தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதியவர் அண்ணா! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.15- தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய அண்ணாவுக்குப் புகழ் வணக்கம் என்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று (15.9.2026) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக திமுக தலைவர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!

தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!

பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் – சமூகநீதியில் – மாநில உரிமையில் – தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!” இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *