சென்னை, செப். 1- பல்வேறு பதவிகளில் 170 காலியிடங்களை நிரப்ப நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு செப்டம்பர் 7 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் மருகேந்தர் லால் நேற்று (31.8.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது:
கால்நடை மருத்துவர், பூச்சியியல் வல்லுநர் உள்பட 31 விதமான பதவிகளில் 170 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் உடைய பதவிகள்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை இணைய வழியில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தையும் யுபிஅய் வசதி வாயிலாக இணைய வழியிலேயே செலுத்திவிடலாம். கணினிவழி தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
