தமிழ்நாட்டில் 4,027 மகளிருக்கு புற்றுநோய் அறிகுறிகள்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, மார்ச். 5- தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 1.21 லட்சம் பெண்களி டம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 4,027 பேருக்கு புற்றுநோய் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தோல் தொழிற் சாலை, சாயப்பட்டறை போன்றவை அதிகமுள்ள மாவட்டங்களில் புற்று நோய் பாதிப்பு அதிகமுள்ளது.
அதனால், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை முடிவு செய்தது.

அதன்படி, ஈரோடு, ராணிப் பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முதல் கட்டமாக புற்றுநோய் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில், 6.07 லட்சம் பெண் களுக்கு மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.33 லட்சம் நபர்கள் அழைக்கப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்று வரு கின்றன.

இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறும்போது,
“தமிழ்நாட்டில் 30 வயதுக்கு மேற் பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரி சோதனை செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. முதல்கட்டமாக நான்கு மாவட்டங்களில் உள்ள 69,000 பெண் களுக்கு மார்பகப் புற்றுநோய் பரி சோதனை செய்தததில், 1,372 பேருக்கு பாதிப்புக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல், 52,000 பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில், 2,655 பேருக்கு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
மொத்தம் 1.21 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், பாதிப் புக்கான அறிகுறி கண்டறியப்பட்ட 4,027 பேருக்கு முதல்கட்ட சிகிச்சை தொடங் கப்பட்டுள்ளது.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற் றால், தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்பை தடுக்க முடியும். அதனால், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *