கடந்த ஆட்சியே பரவாயில்லை… ஜோசப் விஜய்க்கு தூய்மைப் பணியாளர்கள் கேள்வி!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.29- முன்னாடி இருந்த ஆட்சியே பரவாயில்லை என்று நினைப்பதாக சென்னை ரிப்பன் மாளிகையில் 8ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.

என் நெஞ்சில் குடியிருக்கும் என்று கூறி மக்களே என்றார். இப்போது இந்த மக்கள் தான் கஷ்டப்பட்டு இருக்குறோம். நாங்க செத்தா தான் வந்து பாப்பீங்களா.. எங்க பிள்ளைங்க எல்லாத்தையும் வீட்டில விட்டுட்டு இங்க வந்து போராடுறோம். இதுக்கு எதாவது ஒரு தீர்வு சொல்லனும் என்று கண்ணீர் மல்க பெண் ஒருவர் கூறினார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மை பணியாளர்கள் நேற்று 8ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்டகாலமாகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், உரிய ஊதிய உயர்வு, அடிப்படை வசதிகள், தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் வந்து எங்கள் குறைகளை கேட்க வேண்டும். அவர் வந்து பேசும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். முதலமைச்சர் ஜோசப் விஜய் வரவில்லை என்றால் 100 நாட்கள் இல்லை 150 நாட்கள் ஆனாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

8ஆவது நாளான நேற்று ரிப்பன் மாளிகையில் தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து போராட்டம் செய்தனர். முதலமைச்சர் ஜோசப் விஜய்-யின் ஒளிப்படம் ஏந்திய பதாகைகளை ஏந்தியபடி விசில் அடித்து கோரிக்கைகளை நிறைவேற்றுங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் என கூறி போராட்டம் செய்தனர். கேக்குதா கேக்குதா.. சிஎம் சார் கேக்குதா.. என்று கூறியும், விசில் அடித்தும் போராட்டம் செய்தனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:- முன்னாடி இருந்த ஆட்சியே பரவாயில்லை என்று நான் நினைக்கிறேன்.. என் நெஞ்சில் குடியிருக்கும் என்று கூறி மக்களே என்றார். இப்போது இந்த மக்கள் தான் கஷ்டப்பட்டு இருக்குறோம். நாங்களும் மக்கள் தானேங்க.. தூய்மை பணியாளர்கள் எல்லாருமே உறுதிமொழி எடுத்தாங்க.. ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று. மாற்றம் வந்தால் எங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்லி எல்லாரும் ஓட்டு போட்டோம்.

அப்போது எங்களை உள்ளே கூப்பிட்டு வச்சு.. அவர் கையாலேயே எங்களுக்கு தேநீர் கொடுத்தார். பிஸ்கட் கொடுத்தார். எங்களை தோள் மேலே கையை போட்டு போட்டோ எடுத்தார். சால்வை கூட அணிந்தார். நீங்க எல்லாம் என் தாய்குலம் என்று சொன்னார். ஆனால் இன்னைக்கு எங்களை யார் என்றே அவருக்கு தெரியலைங்க.. 8 நாட்களாக கதறிக்கொண்டு இருக்கிறோம். நாங்க செத்தா தான் வந்து பாப்பீங்களா.. எங்க பிள்ளைங்க எல்லாத்தையும் வீட்டில விட்டுட்டு இங்க வந்து போராடுறோம். இதுக்கு எதாவது ஒரு தீர்வு சொல்லனும். என கோரிக்கை வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *