பட்டாசுக்கான தடையை நாடு முழுக்க ஏன் நீட்டிக்க கூடாது? உச்சநீதிமன்றம் கேள்வியால் உற்பத்தியாளர்கள் கலக்கம்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

விருதுநகர், செப்.16 பட்டாசுக்கான தடையை நாடு முழுவதும் ஏன் நீட்டிக்கக் கூடாது? என்று ஒன்றிய அரசிடம் உச்சநீதின்றம் எழுப்பியுள்ள கேள்வியால் பட்டாசு உற்பத்தியார்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 1,570 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1,101 ஆலைகள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாகவும் உபதொழில்கள் மூலம் மறைமுகமாகவும் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். பட்டாசு வெடிப் பதால் மாசு ஏற்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தனி நபர் வழக்குத் தொடரப்பட்டது.

பட்டாசுக்கான தடை

உச்சநீதிமன்றம் தனது 29.10.2021-ஆம் தேதியிட்ட தீர்ப்பில், பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது.

மேலும், சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதைக் குறைக்கும் வகையில் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, ஒன்றிய அரசின் நீரி அமைப்பு மூலம் பசுமைப் பட்டாசுகளுக்கான தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. அதை பின்பற்றி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பசுமைப் பட்டாசுகள் உற்பத்தி செய்யப் பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும்  விழாக்க ளின் போது சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு வணிகம் நடைபெறுவது வழக்கம். தற்போது சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. அதோடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக பட்டாசுகளை அனுப்பும் பணிகளும் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் ஏன் நீட்டிக்க கூடாது

இந்நிலையில், பட்டாசுக்கான தடையை நீக்கக்கோரி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் 13.9.2025 அன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறுகையில், “பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாடு முழுவதும் இருக்க வேண்டும். வசதிபடைத்தவர்கள் வாழும் டில்லிக்கு மட்டுமானதாக இருக்கக் கூடாது. சுத்தமான காற்றை சுவாசிக்க நாட்டின் பிற பகுதி மக்களுக்கு உரிமை இல்லையா? பட்டாசுகான தடையை நாடு முழுவதும் ஏன் நீட்டிக்கக் கூடாது?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் டில்லியில் விதிக்கப்பட் டுள்ள தடையை நீக்கக்கோரும் மனு வுக்கு ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும். பசுமைப் பட்டாசு தயாரிப்பு குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், பட்டாசு உற்பத்தியாளர்களும், விற் பனையாளர்களும் கலக்கமடைந்துள்ளனர்.

அதோடு, பட்டாசுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டால் இத்தொழிலை நம்பியுள்ள கோடிக்கணக்கான தொழி லாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எனவே பட்டாசுக்கு தடை விதிக்காமல் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *