ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ராஞ்சி, ஆக.11–  ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்துவதாக மாணவர் தலைவர் ரவீந்திர பஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (JPSC) மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டு தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி, மாணவர்கள் ஜூலை 25-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கிப் பேரணியாகச் சென்ற மாணவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியும், தடியடி நடத்தியும் வன்முறையை பயன் படுத்தியதாக மாணவர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர்.

இதுகுறித்து மாணவர் தலைவர் ரவீந்திர பஸ்வான் கூறுகையில், “நாங்கள் அமைதியாக பேரணியில் ஈடுபட்டோம். லட்சக்கணக்கான மாணவர்கள் வீதிகளில் இறங்கியுள்ள நிலையில், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்பது அரசின் பொறுப்பு. ஆனால் அரசு எங்களைக் கலைக்க வன்முறையைப் பயன்படுத்துகிறது. இந்த மாணவர் இயக்கம் தற்போது ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *