ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்- 15 பேர் மருத்துவமனையில் அனுமதி!

1 Min Read

புதுவை, ஆக.9 புதுச்சேரியில் காவல்துறை அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உள்ளிட்ட 15 பேர் மயக்கமடைந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அணிவகுப்பின்போது வெய்யி லால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (9.8.2026) புதுச்சேரிக்கு வருகை தந்தார்.

புதுவை காவல்துறையின் சிறப்பான சேவையை அங்கீ கரிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழாவில் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.

அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர், அமைச்சர் அமித்ஷா வுக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

புதுவையில் அரசியல் தலை வர்கள், கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அமித்ஷா தேசி யக்கொடி பேரணியைத் தொடங்கி வைக்கிறார்.

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி புதுச்சேரியில் டிரோன் பறக்கத்தடை, போக்கு வரத்தில் மாற்றம், பலத்த பாது காப்பு போடப்பட்டுள்ளது.

மயக்கம்

புதுச்சேரியில் காவல்துறை அணி வகுப்பின் போது பெண் காவலர்கள் உள்ளிட்ட 15 பேர் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *