நாகர்கோயில், ஆக.9- தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகளை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தந்தை பெரியார் எழுதிய சமூக நீதி சிந்தனைகள் அடங்கிய நூல்கள் துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங் கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட கழகச் செயலா ளர் கோ. வெற்றிவேந்தன் பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக் சாண்டர், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், கிள்ளியூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் பி.கலைச்செல்வன், கோட்டார் பகுதி கழத் தலைவர் ச.ச.மணிமேகலை, இலக்கிய அணி செயலா ளர் பா.பொன்னூராஜன், நாகர்கோயில் மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி, கன்னியாகுமரி நகர செயலாளர் க.யுவான்ஸ், வடசேரி பகுதி தலைவர் முத்து வைரவன், துணைச் செயலர் சி.அய்சக் நியூட்டன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
