ஒன்றிய அரசின் ரூ.1 லட்சம் கோடி தொழில்நுட்ப நிதியிலிருந்து தேர்வு வாரிய உறுப்பினர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கே நிதி ஒதுக்கீடாம்!

1 Min Read

புதுடில்லி,ஆக.9 ஒன்றிய அரசு புதிதாக உரு வாக்கியுள்ள ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ‘ஆராய்ச்சி, வளர்ச்சி நிதியில்’  இருந்து, தேர்வு வாரிய உறுப்பினர்களோடு தொடர்புடைய தனியார் நிறுவனங்களுக்கே கணிசமான தொகை ஒதுக் கப்பட்டிருப்பது தனியார் செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வு விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு…

விண்வெளித் தொழில் நுட்பம், ஆற்றல் துறை மற்றும் மருந்துத் தயாரிப்பு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பப் பிரிவுகளில் செயல்படும் 22 தனியார் நிறுவனங்களுக்கு ரூ.2,192 கோடி மானியக் கடனாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட 22 நிறுவனங்களில் 15 நிறுவனங்கள், திட்டங் களை முடிவெடுத்துத் தேர்வு செய்த 12 உறுப் பினர்கள் கொண்ட குழு வின் 7 தனியார் துறை பிரதிநிதிகளுடன் தொழில் சார்ந்த அல்லது முதலீட்டு ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளன.

இந்த 15 நிறுவனங் களுக்கு மட்டும் மொத்த நிதியில் 62 சதவீதத்துக்கும் அதிகமாக, அதாவது ரூ.1,377 கோடிக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வு வாரியக் குழு வின் தலைவரும், இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க்கின் இணை நிறுவனருமான சவுரப் சிறிவாஸ்தவா என்பவருடன் மட்டும் 9 நிறுவனங்களுக்குத் தொடர்பு இருப்பது கார்ப்பரேட் பதிவேடுகள் மூலம் தெரியவந்துள்ளது.

வரிப்பணம்

பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் அரசு நிதியைப் பெரு மளவில் தனியார் நிறுவ னங்களுக்கு வழங்கும் போது, தேர்வுக்குழு உறுப்பினர்களின் சொந்த நிறுவனம் அல்லது அவர்கள் அதிகம் முதலீடு செய்த நிறுவனங்களே மீண்டும் மீண்டும் பயன்பெறுவது, வெளிப்படைத்தன்மை குறித்த பல்வேறு கேள் விகளை எழுப்பியுள்ளது.

ஏற்ெகனவே நாடாளு மன்ற உறுப்பினர்கள் இது குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அரசு நிதியைப் பயன் படுத்தும்போது மேலும் வலுவான கண்காணிப்பு அமைப்புகளும், முற்றிலும் எந்த அழுத்தங்களுக்கும் இலக்காகமல் முழு சுதந்திரமாக இயங்கும் வல்லுநர்களைக் கொண்ட குழுக்களும் அமைக் கப்பட வேண்டும் என்ற விவாதம் தற்போது தீவிர மடைந்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *