அமெரிக்காவில் பயங்கரம் ‘புளூ ஆரிஜன்’ நிறுவன ராக்கெட் சோதனை ஓட்டத்தின் போது வெடித்து சிதறியது

1 Min Read

கேப் கேனவெரல், மே 31- அமெரிக்காவில் ‘புளூ ஆரிஜன்’ நிறுவனத்தின் நியூ கிளென் ராக்கெட் சோதனை ஓட்டத்தின் போது வெடித்து சிதறியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

உலகப் பெரும் பணக்காரர் ஜெப் பெசோசின் புளூ ஆர்ஜின் நிறுவனம் அதிநவீன விண்கலங்களை உருவாக்கி வருகிறது.இந்நிலையில், புளூ ஆரிஜினின் மிகவும் சக்திவாய்ந்த கனரக ராக்கெட்டான நியூ கிளன் ராக்கெட் புளோரிடாவில் உள்ள ஏவுதளத்தில் சோதனை ஓட்டத்தின் போது திடீரென பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளது.

புளோரிடா ஏவுதளத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யும் நாசாஸ் பேஸ்பிளைட் வெளியிட்ட காணொலி யில், நேற்று முன்தினம் இரவு நியூ கிளன் ராக்கெட் திடீரென தீப்பற்றி எரிந்து, நெருப்புப் பந்தாக வானை நோக்கி வெடித்துச் சிதறியது. அதனைப் பற்றி புளூ ஆரிஜின் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இன்றைய ஹாட்-பயர் சோத னையின் போது ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக ஏவுதள ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இதுகுறித்த முழு விவரங்களையும் ஆராய்ந்த பின்னர் கூடுதல் தகவல்களை வெளியிடுவோம்.இவ்வாறு தெரி வித்துள்ளது. இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெப் பெசோஸ்,‘‘ விபத்திற்கான மூலக் காரணத்தைக் கண்டறிய இன்னும் சில காலம் ஆகும். இது மிகவும் கடினமான ஒரு நாள், எனினும் எதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமோ அதனைச் செய்து, மீண்டும் பறக்கத் தொடங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *