இந்நாள் – அந்நாள்

1 Min Read

அறிவியலாளர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நினைவுநாள் இன்று (02-08-1922)

தொலைபேசியைக் கண்டறிந்து தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட வழிவகுத்த அலெக் ஸாண்டர் கிரகாம் பெல் நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 2, 1922).

1876ஆம் ஆண்டு முதன் முதலாகத் தொலைபேசியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய செய்தியை நாம் அறிவோம். அதுமட்டுமல்லாமல் 1873 முதல்  பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேச்சு உடலியல் மற்றும் பேச்சுத் திறன் பேராசிரியராகப் பணியாற்றியவர் அவர்.  தொலைபேசி கண்டுபிடிப்புக்காக பிரெஞ்சு அரசு வழங்கிய பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். குரலைப் பதிவு செய்யும் ஒலித் தகடுகளை உருவாக்கினார்.

கண்பார்வையற்ற, காதுகேளாத, பேச முடியாமல் தவித்த சாதனையாளர் ஹெலன் கெல்லர், பேச்சுத்திறனை வசப்படுத்திக்கொண்டதில் பெரும் பங்காற்றினார். போட்டோபோன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்ஷன் பேலன்ஸ், வாய்ஸ் ரெக்கார்டிங், சிலிண்டர், உள்ளிட்ட ஏறக்குறைய 60 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றார்.

உலகம் முழுவதும் உள்ள காது கேளாதோர் பள்ளிகளுக்கு பெருமளவில் நிதியுதவி வழங்கியதுடன், அவர்கள் துயரைக் களைவதற்கான பல அமைப்புகளையும் தொடங்கினார். வோல்டா பரிசு, ஆல்பர்ட் பதக்கம், எடிசன் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றார்.

lll

l புகழ்பெற்ற தமிழிசை கலைஞரும், சித்த மருத்துவரும், தமிழ் கிறித்தவ கவிஞரும், இசை ஆய்வாளருமான ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர்  அவர்களின் பிறந்தநாள் இன்று (02-08-1859).

l உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நிறுவிய சேவியர் தனிநாயகம் அடிகள் அவர்களின் பிறந்தநாள் இன்று (02-08-1913).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *