பன்மொழிப் புலவர் தனிநாயகம் அடிகளார் நினைவு நாள் இன்று (01-09-1980)

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஈழத்து தமிழறிஞர், கல்வியாளர் சேவியர் தனிநாயகம் அடிகளார் 02-08-1913 ஆம் நாள் இலங்கையில் யாழ்ப் பாணம் கரம்பொன் என்ற கிராமத்தில் பிறந்தார்.

தொடக்கக் கல்வியை ஊர்காவற்றுறை ‘புனித’ அந்தோனியார் பள்ளியில் படித்தார். 1931 முதல் 1934 வரை ஆங்கிலம், இலத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல  மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து உருசியம், கிரேக்கம், இபுரு, சிங்களம் மொழிகளையும் கற்றுத் தேர்ந்து பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.

1945 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவரது இலக்கியக் கட்டுரைகளின் முதல் தொகுப்பு “தமிழ்த் தூது” 1952 இல் வெளியிடப்பட்டது. 1961 இல் அவர் மலாய் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய தொடர் சொற்பொழிவு “திருவள்ளுவர்” என்ற பெயரில் 1967 இல் நூலாக வெளிவந்தது.

நெடுந்தீவு மக்கள் தனிநாயகம் அடிகளார் அவர்களுக்கு ஆளுயர சிலை அமைத்தனர். 1980 செப்டம்பர் 1ஆம் தேதி தமது 67ஆம் வயதில் இயற்கை எய்திய தனிநாயக அடிகளாருக்கு 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கி சிறப்பு செய்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *