உடையார்பாளையம் ஆசிரியர்
சா.வேலாயுதம் பிறந்தநாள் (01.07.1910)
தந்தை பெரியார் அவர் களின் திராவிடர் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புரை செய்தமைக்காகப் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.
ஆசிரியர் வேலாயுதம் அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் அருகேயுள்ள கரடிக்குளம் என்னும் சிற்றூரில் சாமிநாதன் என்பவருக்கும், பொன்னாச்சி அம்மையாருக்கும் அய்ந்தாவது ஆண் குழந்தையாக 1910 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் நாள் அன்று பிறந்தவர்.
சிதம்பரம் சென்று அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தில் உடற்பயிற்சி கல்வியும், சாரணர் பயிற்சியும் பெற்றவர். ஆசிரியர் பணியில் சேர்ந்து தாம் பணியாற்றிய இடங்களில் சிறப்பாக பணியாற்றினார்.
தந்தை பெரியார் அவர்களின் “குடிஅரசு” மற்றும் “விடுதலை” இதழ்களைப் படிக்க நேர்ந்ததும் அவர் தோற்றுவித்ததே ‘சுயமரியாதை இயக்கம்’ என்பதால் – துணிச்சல் மிக்க வீரராகவே மாறிவிட்டார் வேலாயுதம்.
எட்டாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை முடித்துவிட நேரிட்ட அவர் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியரானார். உடையார்பாளையத்தில் சுயமரியாதைக் கொள்கைகள் காட்டுத் தீயெனப் பரவிக் கொண்டிருந்த காலத்தில் ஆசிரியத் தொண்டுக்கு வந்த இவர் இயக்கத்தில் ஆழமான பற்றுக்கொண்டு அக்கொள்கைகளை மக்களிடத்திலும், வாய்ப்பேற்படும் போது மாணவர்களிடத்திலும் பரப்புவதைத் தம் கடமையாகக் கருதினார் உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம்.
பெரியமனிதர்களின் கண்ணும் கருத்தும் இயற்கையாய் இவர்மீது விழுந்தன. பிறகு சொல்லவா வேண்டும்? “சுயமரியாதையாம், சுயமரியாதை! அவன் மரியாதை(?)யாக அடங்கிக் கிடக்கப் போகிறானா இல்லையா?” என்று கேட்டனர் சிலர்; “எதற்கய்யா இந்தவம்பும் பொல்லாப்பும்?” என்று நல்லெண்ணத்தோடு கருத்துச் சொன்னவர்கட்கு விளக்கங்கள் அளித்தவர் இவர்! மிரட்டியவர்களுக்கும், எச்சரிக்கைக் கடிதங்களுக்கும் பணிவதாக இல்லை அவர்.
கல்லுடைத்து, நிலந்திருத்தி, வியர்வையைச் சிந்தி, மாடமாளிகைகளை ஆக்கிய தொழிலாளி எண்சாண் உடம்பைக் குறுக்கிப்படுத்து, வற்றிய முகமும் குழியான கண்களுமாய் மீண்டும் வெளிக்கிளம்பி நீர்மூழ்கி முத்தெடுக்கும் இயந்திரமாகிறான் பாட்டாளி. புரியாத மொழியிலே தெரியாத சொற்களைப்பேசி எந்த உழைப்புமில்லாமல் ஏய்த்துப் பொருள் பெற்று இன்பமாய்க் காலங்கழிக்கிறான் பார்ப்பான்! இந்தச் சுரண்டல் தவறல்லவா?” என்று முழங்குவதை அவர் நிறுத்திக் கொள்ளவேயில்லை. இரண்டாம் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் இயக்க நிலையினை எடுத்து விளக்குவதில் மிக்க ஈடுபாடு காட்டினார்.
இவரது மகள் சிறுமி மங்கையர்க்கரசியையும் கூட இயக்கத் தொண்டு செய்யுமாறு பயிற்றுவித்தார். இந்தத் தொண்டிற்கு விலையாக விலை மதிப்பற்ற தம் உயிரைத் தரலானார். 1947 நவம்பர் 13 ஆம் நாள் காலையில் ஸநாதன சக்திகளின் சூழ்ச்சியால் அடித்துக் கொல்லப்பட்டார் – தூக்கிலிடப்பட்டார்.
புலவர் குழந்தை பிறந்த
நாள் இன்று (01.07.1906)

தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் புலவர் குழந்தை தம்மை இணைத்துக் கொண்டார். சுயமரியாதைக் கொள்கை யில் உறுதியுடையவராய்த் திகழ்ந்தார். இறை நம்பிக்கை இல்லாதவர். 1938, 1948 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டார். ‘வேளாண்’ என்னும் மாத இதழை நடத்தினார். கைம்பெண் மணம், ஜாதி மறுப்புத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் ஆகியவற்றை முன்னின்று நடத்தினார். திருக்குறள் குழந்தை உரை என்ற நூலினை இருபத்தைந்து நாள்களில் எழுதி வெளியிட்டார்.
புலவர் குழந்தை தமிழ்ச் செய்யுள் மரபினைச் சிதை யாமல் காக்க வேண்டும் என்னும் கருத்துடையவராவார்.
திராவிட இயக்கப் பேராசிரியரான புலவர் குழந்தை எழுதிய “இராவண காவியம்” 1946 இல் வெளியானது. இது இராவணனை நேர்மறைப் பாத்திரமாகவும் ராமன், லட்சுமணன் ஆகியோரை எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நூல் 1948 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டது. 1972 ஆம் ஆண்டில்தான் கலைஞர் ஆட்சியில் இந்தத் தடை நீக்கப்பட்டது. இராவணன் மிக நல்ல குணங்களை உடையவாரகவும், போற்றத்தக்கவராகவும் ஒரு கருத்தை உருவாக்கியதில் இந்த புத்தகத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
இந்தியாவில் எத்தனையோ இராமாய ணங்கள் உள்ளன. வங்க மொழி இராமாயணத்தில் இராவணின் மகள் சீதை என்று உள்
தேசிய மருத்துவர்கள் நாள்
இன்று (ஜூலை 1, 2026)
இந்தியாவில் 1991 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவர் பிதான் சந்திரராய் பிறந்த ஜூலை முதல் நாளை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். மருத்துவர்களின் முக்கியத்துவம், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மருத்துவத் தொழிலை மேம்படுத்தவும் இந்த நாளைப் பயன்படுத்துகிறார்கள்.
1882 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் பிறந்தார் டாக்டர் பிதான் சந்திர ராய். 1962 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் தனது 80 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்த ராய் ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது ஓர் சாதனையாகும். அவரது அளப்பரிய சேவை கருதி இந்திய அரசு அவருக்கு 1961 ஆம் ஆண்டு பாரதரத்னா விருது வழங்கி சிறப்பித்தது. விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்தார். சுதந்திரம் பெற்ற பிறகு மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச் சராக 14 ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போதும் ஏழை களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். இவரது சேவைகளைப் பாராட்டி, ராயின் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை யாற்றுபவர்களுக்கு கடந்த 2976 ஆம் ஆண்டு முதல் மருத்துவர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவத்துறையில் குறிப்பிடத் தகுந்த வகையில் முன்னேற்றங்களைக் கண்டுள்ள இந்தியா, இன்னும் மருத்துவர்களையே பார்த்திராத கிராமங்களுக்கும் சேவை அளிக்க வேண்டியிருக்கிறது. மனித உயிர்களைக் காக்கும் அற்புதமான மகத்தான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களை இந்த நாளில் (ஜூலை 1) நினைவுக்கூர்வோம்!
அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பும், மரியாதையும் வழங்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
தங்கள் சுக துக்கங்களை மறந்து, பிறர் நலம் வாழத் தன் வாழ்நாளையே அர்ப்பணிக்கும் மருத்துவர்கள் சமூகத்தின் முதுகெலும்புகள் ஆவர்.
இந்த மருத்துவர்கள் நாளில், நமக்காக உழைக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளை யும் தெரிவித்து, அவர்களைப் போற்றி மதிப் போம்!
அனைத்து மருத்துவப் பெருமக்களுக்கும் இனிய தேசிய மருத்துவர்கள் நாள் நல்வாழ்த்துகள்!”
ஆசிரியர்களும், மருத்துவர்களும் இந்த சமுதாயத்திற்கு மிக முக்கியமானவர்கள். ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் உள்ள பிணிகளை நீக்குகிறார்கள். மருத்துவர்கள் உடலின் பிணிகளை நீக்குகிறார்கள்.
நல்ல உள்ளம் கொண்டு, மற்றவரின் நலனுக்காக அல்லும் பகலும் உழைக்கும் அத்தனை மருத்துவர்களுக்கும் இந்த மருத்துவர் நாளில், நெஞ்சார்ந்த வாழ்த்துகளை கூறுவதில் மகிழ்கிறோம்.
