பரந்தூர் விமான நிலையத் திட்டம் திட்டத்தை கைவிடத் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கவில்லை ஒன்றிய அரசு விளக்கம்!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 21 சென்னை பரந்தூர் பசுமைவழி விமான நிலையத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றோ அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றோ தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என்று ஒன்றிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையாது என மக்கள் மத்தியில் கருத்துகள் மற்றும் தகவல்கள் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்கு ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத் துவதற்கோ அல்லது கைவிடுவதற்கோ தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு எந்தவொரு கடிதமோ, விண்ணப்பமோ அல்லது கோரிக்கையோ அனுப்பப்படவில்லை.

இத்திட்டத்திற்கான முதற்கட்ட கொள்கை அளவிலான ஒப்புதல்கள் மற்றும் நடவடிக்கைகள் ஏற்ெகனவே முடிவடைந்துள்ள நிலையில், மாநில அரசின் கோரிக்கை இன்றி ஒன்றிய அரசு இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை.

முக்கியக் குறிப்பு: நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறுதல் மற்றும் திட்டத்தைச் செயல்படுத்துதல் ஆகியவை சம்பந் தப்பட்ட மாநில அரசு மற்றும் விமான நிலைய மேம்பாட்டாளரின் பொறுப்பிற்குட்பட்டது என்பதை ஒன்றிய அரசு மீண்டும் சுட்டிக் காட்டியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *