டேராடூன், ஜூன் 19 நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
‘நீட்’ தேர்வு
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் படேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரியா குமாரி (23). இவர் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்விற்கு தீவிரமாக தயாராகி வந்தார். நேற்று முன்தினம் (16.6.2026) இரவு 10 மணி வரை தனது அறையில் படித்துக் கொண்டிருந்த ரியா குமாரி, மறுநாள் (17.6.2026) காலை நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவரது தாய் பலமுறை கதவைத் தட்டியும் எவ்வித பதிலும் கிடைக்காததால், குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரியா குமாரி மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட் டது. அவரது அறையிலிருந்து கைப்பற் றப்பட்ட தற்கொலை குறிப்பு கடிதத் தில், ‘நான் மற்றவர்களுக்கு சுமையாக இருக்கிறேன். எனது குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன்’ என்று ரியா குமாரி குறிப்பிட்டிருந்தார். வினாத் தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக ஏற்ெகனவே ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை இவர் எழுதியிருந்தார். அவர் எதிர்பார்த்த அளவு தேர்வில் சாதிக்க முடிய வில்லையே என்ற கவலையில் அவர் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில் ஏற்ெகனவே மே மாதம் 15ஆம் தேதி பிரதீப் மஹிச் என்ற நீட் மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், உமேஷ் (22) என்ற மாணவர் சிகார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாய் மற்றும் இரண்டு உடன் பிறந்தவர்களுடன் வசித்து வந்தார். ஏற்ெகனவே நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில் மறுதேர்விற்காக படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (16.6.2026) தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உத்யோக் நகர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
