வாசிங்டன், ஜூலை1- பிறப்பால் அமெரிக்க குடியுரிமை வழங்கும், 160 ஆண்டு சட்டத்துக்கு எதிராக அதிபர் டிரம்ப் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்தாண்டு இரண்டாவது முறையாக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து குடியுரிமை விவகாரத்தில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
கடந்தாண்டு பிப்ரவரி யில் புதிய உத்தரவை அவர் பிறப்பித்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெ ரிக்காவில் குடியிருப்போர், தற்காலிக நுழைவுரிமை (விசா) இருப்போருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது.
இந்த உத்தரவை எதிர்த்து அனைத்து மாகா ணங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. அவற் றில் டிரம்பின் உத்தரவுக்கு எதிராகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசா ரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, 6 : 3 என்ற பெரும்பான்மை தீர்ப்பை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் பிறக்கும் எந்தக் குழந்தைக்கும், இயற்கையாகவே அமெரிக்க குடியுரிமை வழங்கும், 160 ஆண்டு கால சட்டத்தைத் திருத்தும் வகையிலான அதிபரின் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த, 1868இல் கொண்டு வரப்பட்ட, 14ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, பெற்றோரின் குடியுரிமை எதுவாக இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தானாகவே அமெரிக்க குடியுரிமை வழங்கப்படு கிறது.
