அமெரிக்க குடியுரிமை விவகாரத்தில் டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

1 Min Read

வாசிங்டன், ஜூலை1-  பிறப்பால் அமெரிக்க குடியுரிமை வழங்கும், 160 ஆண்டு சட்டத்துக்கு எதிராக அதிபர் டிரம்ப் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்தாண்டு இரண்டாவது முறையாக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து குடியுரிமை விவகாரத்தில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.

கடந்தாண்டு பிப்ரவரி யில் புதிய உத்தரவை அவர் பிறப்பித்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெ ரிக்காவில் குடியிருப்போர், தற்காலிக நுழைவுரிமை (விசா) இருப்போருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது.

இந்த உத்தரவை எதிர்த்து அனைத்து மாகா ணங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. அவற் றில் டிரம்பின் உத்தரவுக்கு எதிராகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசா ரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, 6 : 3 என்ற பெரும்பான்மை தீர்ப்பை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் பிறக்கும் எந்தக் குழந்தைக்கும், இயற்கையாகவே அமெரிக்க குடியுரிமை வழங்கும், 160 ஆண்டு கால சட்டத்தைத் திருத்தும் வகையிலான அதிபரின் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த, 1868இல் கொண்டு வரப்பட்ட, 14ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, பெற்றோரின் குடியுரிமை எதுவாக இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தானாகவே அமெரிக்க குடியுரிமை வழங்கப்படு கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *