விருதுநகர் மாவட்ட கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!
27-06-2026 அன்று குற்றாலத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தென்மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி எதிர்வரும்
20-08-2026 அன்று ராஜபாளையம் நகரில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார் – 80 ஆண்டு விழா’’ மற்றும் பெரியார் உலகம் நிதியளிப்பு திறந்தவெளி மாநாடு நடைபெற உள்ளது. எனவே மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் தோழர்கள் உடனடியாக அதற்கான பணிகளைத் தொடங்குவதுடன் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொலைநோக்கு திட்டமான “பெரியார் உலகம்” அமைவதற்கு நமது மாவட்டத்தில் பெருமளவில் நன்கொடை திரட்டி வழங்குவதுடன், திறந்தவெளி மாநாட்டினையும் சிறப்பாக நடத்திட உறுதி ஏற்க வேண்டுகிறேன்.
– இல.திருப்பதி
மாவட்ட கழகத் தலைவர்,
விருதுநகர் மாவட்டம்
