மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 06-06-2026 கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் கூட்டம் காடையாம்பட்டி வட்டம் கஞ்சநாயக்கன்பட்டியில் மேட்டூர் மாவட்டத் தலைவர் எடப்பாடி கா.நா.பாலு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். அந்த பகுதியின் திமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேட்டூர், வெள்ளார், எடப்பாடி,ஓமலூர், சின்ன்னப்பம்பட்டி,சேலத்தைச் சார்ந்த கழகத்தின் தோழர்கள் தோழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் கஞ்சநாயக்கன்பட்டி சிறீதர் நன்றியுரையாற்றினார்.
