லக்னோ, ஜூன் 5- பா.ஜ.க.வின் இரட்டை இன்ஜின் ஆட்சி நடை பெறும் உத்தரப் பிரதேசத்தில் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இந்நிலையில் அம்மாநிலத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய போராட் டத்தை நடத்தியது.
உ.பி. பாஜக அரசு மின்சாரத் துறை யில் எடுத்துள்ள தவறான கொள்கை காரணமாக மாநிலம் முழுவதும் மின்சாரத்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். மீட்டர் பில்லிங்கில் முறைகேடு செய்வது, மின் இணைப்பைத் துண்டிப்பது மற்றும் மீண்டும் வழங்குவது என்ற பெயரில் மக்களிடம் அராஜகமாக பணப்பறிப்பு நடத்தப்படுகிறது. மேலும் சட்டவிரோமாகக் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
இந்நிலையில் தான் இதற்கு எதிராக போராட் டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்தது. இதனடிப்படையில் ஜூன் 1 அன்று மாநி லம் முழுவதும் உள்ள கண்காணிப்புப் பொறி யாளர் அலுவல கங்கள் முன்பு பெருந்திரள் போராட்டங்கள் நடை பெற்றன.
10 சதவீத கட்டண உயர்வை கைவிடுக!
இந்த போராட்டத்தின் போது 10 சத வீத மின் கட்டண உயர்வை உட னடியாகத் திரும்பப் பெற வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்வெட்டுகள் மற்றும் மின் விநியோகக் குறை பாடுகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும். தட்சிணாஞ்சல் மற்றும் பூர்வாஞ்சல் மின் விநியோகக் கழகங்களைத் தனி யார்மயமாக்கும் நடைமுறையை உடனடி யாக நிறுத்த வேண்டும். புதிய மின்சார மசோதா 2025-அய் ரத்து செய்ய வேண்டும். யோகி ஆதித்யநாத் அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றும் வகை யில், அனைத்து நுகர்வோ ருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரமும், விவசாயிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவச மின்சாரமும் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மேலும் மின்சாரத் துறையில் காலி யாக உள்ள பணியிடங்களுக்கு நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் இப்போராட்டத்தில் கோரிக்கைகள் எழுப்பப் பட்டன.
விவசாயிகளுக்குக் குறைந்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளைத் தீர்த்து 18 மணி நேரத் திற்கு முறையான மின் சாரத்தையும், நகர்ப் புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கு 24 மணி நேர தடையற்ற மின்சார விநியோகத்தையும் யோகி தலைமையிலான பாஜக அரசு உறுதி செய்ய வேண் டும் என்றும் சிபிஅய்(எம்) வலியுறுத்தியுள்ளது.
