முதலமைச்சர் சந்திரபாபு கூறுகிறார்
அய்தராபாத், ஜூலை 2 ஏழ்மையை ஒழிப்பதையே ஒரே குறிக்கோளாக கொண்டு பாடுபட்டு வருகிறோம். மாதந்தோறும் 1-ஆம் தேதி முதியோர், மாற்றுத்திறனா ளிகள், கைப்பெண்கள் உள்ளிட்டோ ருக்கு உதவித்தொகை வழங்குகிறோம். இதன் மூலம் 62.20 லட்சம் பேர் பயனடைகின்றனர்.
தொழில்துறை வளர்ச்சியில் ஆந்திரா மிகவும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக் கிறது. ஆந்திராவின் கூடூரில் மெகா பர்னிச்சர் பார்க் அமைய உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளில் 25 சதவீதம் ஆந்திராவுக்கு வருகிறது.
ஆந்திராவில் தொழில் தொடங் கிய பலர் கடந்த ஆட்சியில் வேறு மாநிலங்களுக்குச் சென்றனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. பலர் தொழில் தொடங்க ஆந்திராவை தேடி வரு கின்றனர். அரசு நம்பிக்கையை ஏற்படுத்தி தந்ததால் தொழில் தொடங்க வரிசையில் நிற்கிறார்கள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
