உத்தரப்பிரதேச மாநிலம் மது ராவில் கோடை வெயில் சதமடித்து, 111 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டு அனல் கக்கி வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்குக் கடுமையான வெப்பக் காற்று வீசி வருகிறது.
இந்தக் கடுமையான வெப்பத்தின் தாக்கம் மனிதர்களை மட்டுமன்றி, அங்குள்ள பிருந்தாவனத்தில் உள்ள லட்டு கிருஷ்ணா (பால கிருஷ்ணன்) கோயிலில் உள்ள கிருஷ்ணராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம்! மக்கள், கிருஷ்ணரைத் தங்கள் வீட்டுக் குழந்தையாகவே பாவித்து வழிபடுகிறார்களாம்.
இந்தக் கோயில் நிர்வாகம், உட னடியாகச் சிறப்பு மருத்துவர்களை வரவழைத்துள்ளது. தற்போது ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு செவி லியர்கள் அடங்கிய மருத்துவக் குழு வினர், லட்டு கிருஷ்ணரின் சிலைக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சைகளையும், வெப்பத்தைத் தணிப்பதற்கான தனிச்சிறப்புப் பராமரிப்புகளையும் வழங்கி வருகின்றனராம்!
சரி, பாலகிருஷ்ணனின் மருத்துவ அறிக்கையை வெளியிடுவார்களா?
இதயத் துடிப்பு எவ்வளவு?
ரத்த அழுத்தம் எவ்வளவு?
உடல் வெப்ப நிலை எவ்வளவு? என்ப தையெல்லாம் தெரிவிக்க வேண்டாமா?
அட, வெட்கங்கெட்ட மடமைத்தனமே!
