அட மடமைத்தனமே! கிருஷ்ணன் சிலைக்கு மருத்துவப் பரிசோதனையாம்!

1 Min Read

உத்தரப்பிரதேச மாநிலம் மது ராவில் கோடை வெயில் சதமடித்து, 111 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டு அனல் கக்கி வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்குக் கடுமையான வெப்பக் காற்று வீசி வருகிறது.

இந்தக் கடுமையான வெப்பத்தின் தாக்கம் மனிதர்களை மட்டுமன்றி, அங்குள்ள பிருந்தாவனத்தில் உள்ள லட்டு கிருஷ்ணா (பால கிருஷ்ணன்) கோயிலில் உள்ள கிருஷ்ணராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம்!  மக்கள், கிருஷ்ணரைத் தங்கள் வீட்டுக் குழந்தையாகவே பாவித்து வழிபடுகிறார்களாம்.

இந்தக் கோயில் நிர்வாகம், உட னடியாகச் சிறப்பு மருத்துவர்களை வரவழைத்துள்ளது. தற்போது ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு செவி லியர்கள் அடங்கிய மருத்துவக் குழு வினர், லட்டு கிருஷ்ணரின் சிலைக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சைகளையும், வெப்பத்தைத் தணிப்பதற்கான தனிச்சிறப்புப் பராமரிப்புகளையும் வழங்கி வருகின்றனராம்!

சரி, பாலகிருஷ்ணனின் மருத்துவ அறிக்கையை வெளியிடுவார்களா?

இதயத் துடிப்பு எவ்வளவு?

ரத்த அழுத்தம் எவ்வளவு?

உடல் வெப்ப நிலை எவ்வளவு? என்ப தையெல்லாம் தெரிவிக்க வேண்டாமா?

அட, வெட்கங்கெட்ட மடமைத்தனமே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *