ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

2 Min Read

வாசிங்டன், மே 29- ஈரான் தனது வசம் உள்ள செறிவூட்டப் பட்ட யுரேனியம் இருப்பை ஒப்படைப்பதற்குக் கைமாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் எதுவும் நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமான அமைதிப் பேச்சு வார்த்தை நடந்து வரும் சூழலிலும், அமெரிக்கா தனது கடுமையான வெளியுறவுக் கொள்கை நிலைப் பாட்டைச் சற்றும் தளர்த்தத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலின் போது, தற்போதைய பேச்சுவார்த்தை உடன்படிக்கையின் படி அணுசக்தி சலுகைகளுக்குப் பதிலாக ஈரானுக்குப் பொருளாதாரத் தடைகளில் ஏதேனும் தளர்வுகள் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப் “இல்லை, இல்லவே இல்லை. பொருளாதாரத் தடை நீக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அவர்கள் தங்களின் செறிவூட்டப் பட்ட யுரேனியத்தை ஒப்படைக்கப் போகிறார்கள், ஆனால் அதற்காகத் தடைகள் நீக்கப்படாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும், ஈரான் ஒப்பந்தம் செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளது, ஆனால் இன்னும் அமெரிக்காவின் எதிர் பார்ப்புகளை எட்டவில்லை என்று அவர் கூறினார்.

தற்போதைய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், “நாங்கள் இதில் திருப்தியடையவில்லை, ஆனால் விரைவில் திருப்தியடைவோம். இல்லையெனில் நாங்கள் இந்த வேலையை ராணுவ நடவடிக்கை மூலம் முடிக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.

இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் 30 நாட்களுக்குள் வணிகக் கப்பல் போக்குவரத்தைப் போருக்கு முந்தைய நிலைக்குக் கொண்டு வரவும், அதற்குப் பதிலாக அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தளர்த்தி ராணுவத்தைக் குறைக்கவும் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு தயாராகியுள்ளதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. ஆனால், இந்தத் தகவலை முற்றிலும் ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று கூறி வெள்ளை மாளிகை சில மணி நேரங்களிலேயே நிராகரித்து விட்டது.

இன்னொரு புறம் ஈரானுடனான பேச்சுவார்த்தை நன்றாகச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளதால், அடுத்த சில நாட்களில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *