பிரஸ்ஸல்ஸ், மே 29– பெல்ஜியத்தில் தண்ட வாளத்தை கடக்க முயன்ற பள்ளி சிறிய வேன் மீது ரயில் மோதிய விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அய்ரோப்பிய நாடான பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருந்து வடமேற்கே உள்ள புக்கன்ஹவுட் என்ற பகுதியில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.
26.5.2026 அன்று காலை 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக 120 கி.மீ., வேகத்தில் வந்த ரயில், பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பள்ளிவேன் தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் இரண்டு குழந்தைகள், ஓட்டுநர், உதவியாளர் என 4 பேர் உயிரிழந்தனர். அய்ந்து குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தும் வேன் ஓட்டுநர் தண்டவாளத்தை கடக்க முயன்றாரா அல்லது சிக்னல் கோளாறா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
