பங்குச்சந்தை மதிப்பு இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தைவான் சாதனை!

1 Min Read

தைபே, மே 29- உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பில் தைவான் முதன்முறையாக இந்தியாவை பின்னுக்குத் தள்ளி, உலகின் 5ஆவது மிகப்பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது.

தற்போது தைவானின் மொத்த சந்தை தைவான் $4.95 டிரில்லியன் மதிப்புடன் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தியா $4.92 டிரில்லியன் சந்தை மதிப்புடன் 6ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளது.

தைவான் பங்குச்சந்தையின் இந்த அசுர வளர்ச்சிக்கு அந்த நாட்டின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான டிஎஸ்எம்சி மட்டுமே மிக முக்கிய காரணமாகும்.

தைவானின் முதன்மை பங்குச்சந்தை குறியீட்டில் இந்த டிஎஸ்எம்சி நிறுவனம் மட்டுமே 42 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டு முன்னிலை வகிக்கிறது. உலக அளவில் தற்போது நிலவி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப புரட்சி மற்றும் சிப் பற்றாக்குறை சூழலை தைவான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளது.

மேலும் டிஎஸ்எம்சி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 49 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.

உலகளவில் ஏஅய் தொழில்நுட்பத்திற்கு தேவையான அதிநவீன செமிகண்டக்டர்கள் தயாரிப்பில் இந்த நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருவதே தைவான் இந்த வரலாற்று சிறப்புமிக்கப் பொருளாதார முன்னேற்றத்தை பதிவு செய்ய உதவியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *