காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்! மருந்துப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவிக்கரம்!

1 Min Read

புதுடில்லி, மே 28- காங்கோவில் தீவிரமடைந்து வரும் எபோலா நோய்க்கு எதிரான நடவடிக்கை களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா அவசரகால மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது.

காங்கோ, உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில், ‘எபோலா’ உயிர்க்கொல்லி வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்கும்படி, உலக நல்வாழ்வு நிறுவனம், பிற நாடுகளை எச்சரித்து உள்ளது. இந்த தொற்று பாதிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ள எபோலா நோய்ப் பரவலுக்கு எதிரான காங்கோவின் போராட்டத்திற்கு உதவும் வகையில் இந்தியா அவசர மருத்துவப் பொருட்களை அனுப்பி யுள்ளது.

நோய் கண்டறியும் கருவிகள், சிகிச்சைக்கான பொருட்கள் மற்றும் நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டுப் பொருட்கள் பெறப்பட்டதை ஆப்ரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மய்யம் உறுதிப்படுத்தியுள்ளது; இவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவாக விநியோகிக்கப்படும்.

எபோலா நோய்க்கு எதிரான தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, இந்திய அரசும், மக்களும் தாராளமாக நன்கொடையாக அவசரகால மருந்துப் பொருட்கள் வழங்கியதற்கு ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மய்யம் நன்றி தெரிவித்தது.

அந்த அமைப்பு உயிர்களைப் பாதுகாப்பதற்கும் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்தியா அளித்துவரும் தொடர்ச்சி யான ஆதரவை வழங்கி வருகிறது என தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *