பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் கொடூரம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மணமகள்மீது சரமாரி தாக்குதல் புதுப்பெண் குதிரையில் ஊர்வலமாக சென்றதால் ஜாதிவெறிக் குண்டர்கள் வெறிச் செயல்

1 Min Read

ஜெய்ப்பூர், மே 6 பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தின் ஹரி யாவ் கிராமத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பூஜா மேக்வால் என்ற மணமகளின் திருமண ஊர்வலம் முக்கிய சாலை வழியாகச் சென்றது. மணமகள் குதிரையில் சென் றார். அப்போது திருமண ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய ஜாதி வெறிக் குண்டர்கள், ‘‘நீ ஒரு தாழ்த்தப்பட்டவர். நீ எப்படி குதிரையில் செல்லலாம்? அதுவும் எங்கள் வீடு முன்பு செல்ல உனக்கு எப்படி தைரியம் வந்தது? மீறினால் ரத்த ஆறு ஓடும்” என மிரட்டலுடன் ஜாதி ரீதியாகவும், ஆபாசமாகவும் பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தடி, கற்கள், இரும்புத் தண்டுகள் மற்றும் வாள்களைக் கொண்டு தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் காய மடைந்தனர். மேலும், திருமணக் குழுவினரிடமிருந்து தாலிச் சரடுகள், கைக்கடி காரங்களை ஜாதி வெறிக் கும்பல் கொள்ளையடித்துள்ளது. இந்த தாக்குதலில் பெண்களும் ஈடுபட் டுள்ளனர். மணமகளின் தந்தை பை ருலால் மேக்வால் அளித்த புகாரின் பேரில் காவல்துறை சாதாரண எப்அய்ஆர் மட்டுமே பதிவு செய் துள்ளது.

ஜாதி பெயரைச் சொல்லி கொள்ளை

இதனை கண்டித்து மே 1 அன்று, பீம் ஆர்மி அமைப்பின் உறுப்பி னர்கள் காவல் நிலையம் முன் திரண்டு, குற்றம் சாட்டப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்கொடுமை தடுப் புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாமதமானால், பெரிய அளவிலான போராட்டம் நடத் தப்படும் என்றும் அவர்கள் எச்சரித் துள்ளனர்.

இதே கிராமத்தில் முன்னதாக நடந்த மற்றொரு தாழ்த்தப்பட்டவர் திருமணத்தையும் இதே கும்பல் தடுத்து நிறுத்தியதாக மணமகளின் குடும் பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இவர்களுக்கு ஜாதியை விட, ஜாதியைச் சொல்லி கொள் ளையடிப்பதே முக்கியமான வேலை என உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *