புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி – ஜூன் 1-ஆம் தேதி தொடக்கம்

1 Min Read

புதுச்சேரி, ஏப்.29 புதுச்சேரி யூனியன்பிரதேச ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஆம் ஆண்டின் முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அட்டவணைப்படி நடைபெறும். பொதுமக்கள் தாங்களே அரசு அறிவித்துள்ள இணையதளத்தின் மூலம் தகவல்களை பதிவுசெய்யும் சுய கணக்கெடுப்பு வருகிற மே 17-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும்.

கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடுதோறும் சென்று தகவல்களை சேகரிக்கும் பணி ஜூன் 1-ஆம்தேதி முதல் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட மொத்தம் 33 விவரங்கள் சேகரிக்கப்படும்.

1948 மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டப்படி, பொதுமக்கள் சில முக்கிய சட்டப்பூர்வ கடமைகளை கடைப்பிடிக்க வேண்டும். கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவது கட்டாயமாகும். வீடுகளில் கணக்கெடுப்பு அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் அனைத்து விவரங்களும் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும். இந்த தகவல்கள் வழக்குகளில் சான்றாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்பது உறுதியாக அறிவிக்கப்படுகிறது. கணக் கெடுப்புப் பணிகளில் ஒத்துழைக்காமல் இருப்பது, தவறான தகவல்கள் வழங் குவது அல்லது அலுவலர்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகும். இத்தகைய விதிமீறல்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *